தாக்குதல்தாரியின் உடலை அடக்கம் செய்ய மீண்டும் எதிர்ப்பு – தடுமாற்றத்தில் பொலிஸார்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல்தாரியின் உடலை புதைப்பதற்கு ரிதிதென்னையிலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த தாக்குதல்தாரியின் சடலம் தொடர்ந்தும் மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் தாக்குதல்தாரியின் உடலை புதைப்பதற்கு மட்டக்களப்பு, காத்தான்குடி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து, சடலத்தை எங்கு புதைப்பதென தெரியாது பொலிஸார் தடுமாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்