பல்கலைக்கழக மாணவி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

களனி பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் கூரிய ஆயுதம் ஒன்றினால் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி றாகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (வயாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காதல் பிரச்சினை காரணமாக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்