அரசமைப்பை மீறி தவறிழைத்துள்ளீர்! – மைத்திரிக்கு ரணில் காட்டமான கடிதம்

19ஆவது திருத்தத்தின்படி நீங்கள் நினைத்தபடி அமைச்சர்களை நியமிக்க முடியாது. அரசமைப்பை மீறி தவறைத் செய்திருக்கின்றீர்கள்.”

– இவ்வாறு தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

“அமைச்சர் ஒருவர் பதவி விலகினால் அந்த இடத்துக்கு மற்றொருவரை நியமிக்கப் பிரதமரின் ஆலோசனை பெறப்பட வேண்டும். அத்துடன் பிரதமர் அனுப்பும் அமைச்சர் பெயர்களைப் பரிசீலிக்க வேண்டும். 19ஆவது  திருத்தம் இதனைத் தெளிவாகச் சொல்கின்றது. ஆனால், எடுத்தபடி பதில் அமைச்சர்களை நீங்கள் நியமித்திருப்பது தவறானது.

அரசமைப்பை மீறிய உங்களின் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படலாம்” – என்றுள்ளது.

.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்