கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல்!

கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.

கொக்குவில் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள முச்சக்கரவண்டித் திருத்தகத்தில் பொறுப்பதிகாரி நின்ற வேளை, அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதனையடுத்து, தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆவா குழுவைச் சேர்ந்த சிலர் பொழுதைக் கழிப்பதற்காக கொக்குவில் ரயில் நிலைய பகுதிக்குச் செல்வதாகவும் அவர்களுக்கு இடம்கொடுத்து நட்பு வைத்திருந்தமையாலேயே பொறுப்பதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தாக்கியவர்கள் தனுரொக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்