நாடாளுமன்ற தெரிவுக்குழு – இன்று முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா முன்னிலையாகவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளைமுன்னெடுக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று கிழக்குமாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாமுன்னிலையாகவுள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று மாலை 3.30க்கு மீண்டும்கூடுவுள்ளது.

இன்றைய விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்காக கிழக்குமாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, முன்னாள் காவல்துறை மாஅதிபர் என். கே.இளங்கக்கோன் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின்முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமான்ன ஆகியோருக்கும்நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்துஅறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தமூவரடங்கிய குழுவில், முன்னாள் காவல்துறை மாஅதிபர்இளங்கக்கோன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள்செயலாளர் பத்மசிறி ஜெயமான்ன ஆகியோர் அங்கம்வகித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்