அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு!

அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் வாரந்தோரும் செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெரும். எனினும் ஜனாதிபதியின் வருகையின்மையால் இவ்வாரம் இடம்பெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் இரத்து செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கை மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தக் குழுவில் முன்னிலையாகி பொலிஸார், பாதுகாப்புத் தரப்பினர் என பல உயரதிகாரிகளும் சாட்சியம் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானதுடன், ஜனாதிபதியின் கவனயீனம் காரணமாகவே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன எனும் கோணத்திலேயே பலர் சாட்சியமளித்திருந்தனர்.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் கூட்டப்பட்ட விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நிறுத்த வேண்டுமென ஜனாதிபதி கேட்டிருந்தார். அத்தோடு தெரிவுக்குழுவின் அமர்வுகளை நிறுத்தாவிட்டால், அமைச்சரவைக் கூட்டங்களை புறக்கணிப்பேன் என கூறியதுடன், இந்த வாரம் இடம்பெறவிருந்த அமைச்சரவைக் கூட்டத்தையும் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்