மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக நியமனம்!

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (வியாழக்கிழமை) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் ஜூன் மாதம் 8 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்