வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும்காற்று: 2 வீடுகள் சேதம்

வவுனியாவில் கடந்த சில நாட்களாக வீசி வரும் கடும் காற்று காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் காற்றின் தாக்கம் குறித்து இன்று கேட்ட போதே மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் இவ்வாறு தெரிவித்தது.  அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும் காற்று வீசி வருகின்றது. இக் காற்றின் தாக்கத்தால் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகாமகிழங்குளம் மற்றும் பிரப்பமடு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் இரண்டு வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளது.

மகா மகிழங்குளம் பகுதியில் ஒரு வீட்டின் கூரை காற்றினால் தூக்கு வீசப்பட்டுள்ளது. இதனால் அவ் வீட்டில் வசித்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேரும், பிரப்பமடுவில் ஒரு வீட்டின் சீற் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டமையால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கான இழப்பீட்டினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்