சிலரின் தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகள் நாட்டின் வளர்ச்சியை தடுக்காது – மைத்திரி

சிலரின் தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளினால் நாட்டின் வளர்ச்சியும் பொதுமக்களின் நலனையும் சீர்குலைக்க அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

ஒரு சிலரின் இத்தகைய தனிப்பட்ட அரசியல் இலாபம் தேடும் செயற்பாடுகள் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒருபோதும் தடையாக இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் உள்ள தலைவர்கள் சிலர் தங்கள் ஆதாயத்திற்காக நாட்டின் வளர்ச்சியும் பொதுமக்களின் நலனையும் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்