ஜனாதிபதி பொதுமக்களின் விருப்பத்தின்படி செயற்பட வேண்டும் – விஜேபால

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு விருப்பம் இருந்தால் அவர் முதலில் பொது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அமைச்சரவை கூட்டத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாக விரைவில் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவர்.

அந்தவகையில் அமைச்சரவையின் தலைவரும் அரசாங்கத்தின் தலைவருமான ஜனாதிபதி மைத்திரி, நாடாளுமன்றில் தலைவராக இருக்கும் பிரதமருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாட்டின் நலன் கருதி பல முக்கிய முடிவுகளை எடுக்க அமைச்சரவை அனுமதி அவசியம். எனவே அவர் விரைவில் அமைச்சரவையைக் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்