பயங்கரவாத தாக்குதலில் சிக்கிய தேவாலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பமானது!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கத்தொலிக்க பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறையுரை ஆற்றினார்.

மேலும் தமிழ் சிங்கள் மொழிகளில் ஆராதனைகள் இடம்பெற்றதுடன் தமிழ் மொழியிலான மறையுரையினை மன்னார் மறை மாவட்ட ஆயர் ஆற்றினார்.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதில் பலர் கொல்லப்பட்டும் படுகாயப்படுத்தப்பட்டுமிருந்தனர். தாக்குதலில் சேதமான தேவாலயம் அவசர அவசரமாக புனரமைப்புச் செய்து முடிக்கப்பட்டு நேற்றைய தினம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்