கோட்டாவே ஜனாதிபதி வேட்பாளர் – ஐ.தே.க. படுதோல்வியடைவது உறுதி என்கின்றார் பந்துல

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா என்பது உறுதியான விடயம் என தெரிவித்த பந்துல குணவர்தன குறித்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி எவரைக் களமிறக்கினாலும் படுதோல்வியடையும் எனத் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ என்பதில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

எனவே ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியையே சந்திக்கும்.

முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொண்ட அரசாங்கத்தின்  செயற்பாடுகளின் காரணமாகவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலை தொடர்ந்து அரசாங்கததின் அனைத்து மோசடிகளும் முழுமையாக மறக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு  மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்களின் மோசடியே ஐ.தே.க.வின் பிரதான பலவீனம்.

கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு காட்டும் அக்கறையினை நடப்பு அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் காட்டுவதில்லை.” என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்