சிங்கப்பூர் நீதியமைச்சரை சந்தித்தார் ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சிங்கப்பூரின் நீதி அமைச்சர் கே.சண்முகனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையிலேயே நேற்று(வியாழக்கிழமை) அவர் சிங்கப்பூரின் நீதி அமைச்சர் கே.சண்முகனை சந்தித்து பேசியுள்ளார்.

இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.

குறித்த சந்திப்பில் சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கையின் நிரந்தரமற்ற உயர்ஸ்தானிகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்