நாட்டின் முத்துறைகளிலும் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன – கெஹலிய

நாட்டின் முத்துறைகளிலும் முரணப்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முறையற்ற செயற்பாட்டினூடாக சபாநாயகர் கரு ஜயசூரிய முத்துறைகளிலும் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அமைத்த நாடாளுமன்ற தெரிவு குழுவின் ஊடாகவே பல பிரச்சினைகள் தற்போது ஏற்பட்டுள்ளன.

தெரிவு குழுவில் சாட்சியங்கள் அனைத்தும் ஜனாதிபதிக்கு எதிராக அமைந்துள்ளமையினால் அவர் அமைச்சரவையினை கூட்டாமல் அரசியல் நெருக்கடியினை ஏற்படுத்த முனைகின்றார். இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் சபாநாயகரே பொறுப்பு கூற வேண்டும்.

அத்துடன் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜனாதிபதியும், பிரதமரும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமை பொருத்தமற்றது’ என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்