விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை ஒப்பிட்டு மைத்திரி தெரிவித்த கருத்திற்கு றவூப் ஹக்கீம் பதிலடி!

ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக முடியும் என தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகத்திற்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை தற்கொலைதார கும்பலிலிருந்து யாரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது, பிரபாகரனுக்கு என ஒரு ஆதரவு தளமிருந்தது, அரசியல் கொள்கை இருந்தது, அவருக்கென்று விடுதலைப்போராட்டம் என்ற ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது, ஆனால் இந்த இலங்கை தற்கொலைத்தார கும்பலுக்கென்று எதுவுமே கிடையாது, இவர்களுக்கு இந்த ( முஸ்லிம் ) சமூகத்திடமிருந்து எந்த ஆதரவும் கிடையாது, அப்படியான கும்பல் பிரபாகரன் என்கிற அந்தஸ்த்திற்கு வந்து விடுவார்கள் என்று அச்சப்படுகின்ற அதீதமான அச்சப்போக்கு அபத்தமானது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்