பயங்கரவாதி மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றிரவு(வியாழக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்