சுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்!

வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (16) மருதங்கேணி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.பிற்பகல் ஒரு மணிக்கு மருதங்கேணி பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இணைத்தலைவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதேவேளை, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர், வடமராட்சி கிழக்கு வட்டாரங்களைச் சேர்ந்த பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்ஆகியோரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.இந்தக் கூட்டத்தில் வடமராட்சி கிழக்கின் அபிவிருத்திகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்