யாழில் அரசாங்கத்தின் அறிவித்தலை மீறிய மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் விடுமுறை தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த மூவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் முடமாவடி மதுபானசாலைக்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) காலை 8 மணியளவில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாளை பொஷன் போயாவை முன்னிட்டு இன்றும் நாளையும் மதுபான சாலைகளை மூடுவதற்கான அறிவுறுத்தலை மதுவரித் திணைக்களம் நேற்று வெளியிட்டிருந்தது.

இந்த நிலையிலேயே அறிவுறுத்தலை மீறி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த மூவரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

அத்தோடு பாரவூர்தியிலிருந்து சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கால் போத்தல் அளவுடை 450 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் பாரவூர்திச் சாரதி உள்ளிட்ட கைது செய்யப்பட்ட மூவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்