பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையானார் ஹிஸ்புல்லா!

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

இவர் இன்று(சனிக்கிழமை) காலை பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளுக்காகவே அவர் பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத்தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று முன்தினம் ஆஜராகி அவர் சாட்சியம் வழங்கிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்