பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது குறித்து ஆராய முஸ்லிம் தலைமைகள் சந்திப்பு

அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது குறித்து ஆராய முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளனர்.

அதற்கமைய அந்தச் சந்திப்பு எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹலீம் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு மஹா சங்கத்தினர் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக ஆராயவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம்சாட்டி முஸ்லிம் தலைவர்கள் 9 பேர் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

அதன்படி அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசீம் மற்றும் எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹீர் மௌலானா, பைசல் காசீம், அமீர் அலி ஆகிய இராஜாங்க அமைச்சர்களும் பிரதியமைச்சரான அப்துல்லா மஹ்ரூப்பும் பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்