குருநாகல் வைத்தியர் தொடர்பில் சுகாதார அமைச்சின் விசாரணைக் குழுவின் அறிக்கை! விரக்தியில் தாய்மார்!

குருநாகல் வைத்தியர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருக்கலைப்பு மற்றும் மகப்பேற்றை தடுக்கும் எந்த சிகிச்சைகளையும் அவர் வழங்கியமைக்கான ஆதாரம் எதுவும் இல்லையென்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவரின் சிகிச்சையையடுத்து மகப்பேறு பாதித்துள்ளதாக பல பெண்கள் முறைப்பாடு செய்திருந்தாலும் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு முன்வர தயங்குவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது. அதேசமயம் எதிர்வரும் 27 ஆம் திகதி குருநாகல் நீதிமன்றத்தில் வைத்தியர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை நடைபெறவுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

விசாரணைக் குழுவின் இந்த அறிக்கை தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் விசனம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்