வவுனியாவில் வரட்சி காரணமாக வற்றிப் போகும் குளங்கள்: மீன்கள் இறப்பு

>
>>
>> வவுனியாவில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து வருகின்றது.
>>
>> நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் வரட்சியான காலநிலை நீடிக்கின்றது. இவ் வரட்சி நிலை காரணமாக குளங்களின் நீர்மட்டமானது சடுதியாக குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து வருகின்றன.
>>
>> குறிப்பாக, புதுக்குளம், மூனாமடுக் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக அதிகளவிலான நீர் பெறப்பட்டமையாலும், வெப்பமான வரட்சிக் காலநிலையாலும் நீர்வற்றியுள்ளது. இதனால் அப்பகுதிக் குளத்தில் பெருந்தொகையான மீன்கள் இறந்து வருகின்றன. அத்துடன், கால்நடைகளும் நீர் இன்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன.


>

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்