காரைதீவில் வர்த்தகநிலையம் ஒன்றில் கொள்ளை ..!

அம்பாறை – காரைதீவு பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு வர்த்தகநிலையம்
ஒன்றை உடைத்து அங்கிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

காரைதீவு பிரதான வீதியில் சண்முகா மகா வித்தியாலயம் முன்பாக உள்ள கடையே
உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த திருட்டு சம்பவத்தில்
கடையில் இருந்த பால்மா பக்கட்கள் , ரீலோட் காட்கள் , மின் குமிழ்கள்
போன்ற பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர் மகேந்திரன் (துரை)
தெரிவித்தார்.

இக் கொள்ளை சம்பவம் குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை
பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்