ஹிஸ்புல்லா கொள்கையில்லாத ஒரு அரசியல் வாதி; கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கொள்கையில்லாத ஒரு அரசியல் வாதி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஹிஸ்புல்லா விமர்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு களுதாவளை கம்பரலி வேலைத்திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்