காணாமல் போயிருந்த மாணவி சடலமாக கண்டெடுப்பு!

பதுளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவி 3 நாட்களாக காணாமற்போயிருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மாணவியின் சடலம் இன்று காலை 7.30 மணியளவில் லொங்கல்ல நீர்த்தேக்கத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதுளை, மெத பத்தன பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய லக்ஷிகா மதுவந்தி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி குறித்த மாணவி காணாமல் போயிருந்ததாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கந்தகெட்டிய பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த மாணவியின் பொருட்கள் சில லொங்கல்ல நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள புதர் ஒன்றிற்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் லொங்கல்ல நீர்தேக்கத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார் இன்று மாணவியின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது கொலையா என்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்