இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகம் நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வு 2019…

காந்தன்…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சம்மாந்துறை பிரதேச செயலகம் நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வு16/06/ 2019 இன்று காலை 8.30
மணியளவில் வீரமுனை ஸ்ரீ சிந்தாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்
வே .ஜெகதீஸன் அவர்களும் மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர்,கிராம சேவக உத்தியோகத்தர், வளவாளர்கள் , மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், அறநெறிப்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் ஏன பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் கலை கலாசார பாரம்பரிய நிகழ்வுகளுடன் அதிதிகள் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்டு ஆலய வழிபாடு,குரு பூஜை,கோமாதா பூஜை,பிடி அரிசி சேமிப்பு ,வஸ்து தானம் ,மரநடுகை என்பன இடம்பெற்றது. மேலும்
இதன்போது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தமிழர்களுடைய கலை,கலாசார நிகழ்வுகளை சம்மாந்துறை மக்கள் காணக்கூடியதாகவும் இதனை ஒவ்வொரு தமிழக் கிராமங்களிலும் இடம்பெறவேண்டும்.எனவும் கூறினார்.
அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது. நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்