பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு குண்டுவெடிப்பில் உயிர் இழந்த உறவுகளுக்கு ஆத்மசாந்தி வேண்டி தாகசாந்தி வழங்கி வைக்கப்பட்டன.

பொசன் பூரணை தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட அனைத்து இன காணாமல் போனவர்களின் குடும்ப ஒற்றுமை சங்கத்தினரின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் பிரதான வீதியில் பொது மக்களுக்கான தாகசாந்தி மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் தாகசாந்தி நிகழ்வானது கடந்த ஏப்ரல் 21 குண்டுவெடிப்பில் உயிர் இழந்த உறவுகளின் ஆத்ம சாந்தியடைய வேண்டி அம்பாறை மாவட்ட அனைத்து இன காணாமல் போனவர்களின் குடும்ப ஒற்றுமை சங்கத்தினரின் ஏற்பாட்டில் பொசன் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை(16) வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

இவ் நிகழ்வானது அம்பாறை மாவட்ட அனைத்து இன காணாமல் போனவர்களின் குடும்ப ஒற்றுமை சங்கத்தின் உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டு தாகசாந்தி வழங்கி வைத்திருந்தனர் இதன்போது ஊடகங்களுக்கு அமைப்பின் நிருவாகிகள் கருத்து தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்ட அனைத்து இன காணாமல் போனவர்களின் குடும்ப ஒற்றுமை சங்கமானது தமிழ்,சிங்கள, முஸ்லிம் இன பேதங்கள் இன்றி தொடர்ந்து இவ்வாறான சமூகப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதுடன்

நாம் எமது காணாமல் போன உறவுகளின் குடுமபங்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டு வரும் நிலையில் எமது அமைப்பு இவ்வாறான சமூகப் பணிகளை முன்னெடுப்பதில் நாம் சந்தோசமடைவதுடன் காணாமல் போன உறவுகளுக்கும் புண்ணியம் கிடைக்கும் என நம்புவதாகவும் அமைப்பின் தலைவர் என்.நிசங்ஹாமி தெரிவித்திருந்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்