அதிவேக மின்னலாய்ச் செல்கிறாய்.

காற்றுப் போகாத இடைவெளியில்
உன் காதல் வந்து புகுந்தது,
கால் வைக்கும் இடமெல்லாம்
நிழல் வந்து படர்கின்றது.

பட்டமிடும் நூலொன்று
பாதிவெளி பிரிந்து
காற்றலை வழியே மனம்
அலை மோதித் துடிக்கின்றது.

அதி வேக மின்னலாய்
உன் முகம்
அரை நொடியில் மறைகின்றது.
அதை நினைத்து என் கண்கள்
கண்ணீரில் மிதற்கின்றது.

காலம் செய்த கோலமாய்
காதல் இரண்டாய் பிரிந்து
கல்லில் விழுந்த கண்ணாடியாய்
கன்னி மனம் சிதறியது.

திசை மாறிப் போனவனே..!
விசை கொண்டு வந்துவிடு.
கழுத்துக்கு விலங்கிட்டு
மனைவியாக ஏற்று விடு.

-வை.கே.ராஜூ-
நாவிதன்வெளி-2

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்