நில மோசடி விவகாரம் – வெற்று ஆவணங்களில் ரிஷாட் கையொப்பங்களைப் பெற்றாரா?

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மன்னாரில் 3000 ஏக்கர் அரச காணியை, போலி ஆவணங்கள் தயாரித்து அவரது உறவினர்கள் பலரின் பெயரில் பதிவு செய்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) 8 பேருக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அரசு நிறுவனங்களில் மோசடி மற்றும் ஊழல் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையகத்தில் தெனியவல பாலித தேரர் முறைப்பாடு வழங்கியிருந்தார்.

அதில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மன்னாரில் 3000 ஏக்கர் நிலத்தை தனது மனைவி மற்றும் உறவினர்களின் பெயரில் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கோரப்பட்டபோது, உள்நாட்டுப் போரின்போது அப்பகுதியை விட்டு வெளியேறிய மக்களிடமிருந்து 3000 ஏக்கர் நிலத்தை பதியுதீன் கையகப்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இந்த நிலங்களை 500,000 இலிருந்து 1000,000 ரூபாய் கொடுத்து வாங்கி வைத்திருப்பதாகவும், இதற்காக சில நபர்களிடமிருந்து வெற்று ஆவணங்களில் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழுவின் சான்றுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி ஆணையத்தில் கிட்டத்தட்ட 17 பேர் சாட்சியமளித்துள்ள நிலையில், தற்போது தொடர்ந்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்