மாகாண சபை தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்க கோரிய மனு விசாரணைக்கு!

மாகாண சபைத் தேர்தல்கள் இந்தவருடம் செப்டம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த தேர்தல் ஆணையத்தில் உத்தரவு பிறப்பிக்கக்கோரி பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி ‘சத்ய கவேஷகாயோ’ என்ற அமைப்பினால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

வாக்காளர்களை வரையறுக்கும் செயல்முறையை சுட்டிக்காட்டுவதன் மூலம் தற்போதுள்ள அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்து வருவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் 6 மாகாண சபைகள் செயலிழந்துள்ளதாகவும் மக்களின் வாக்குரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் வலியுறுத்தினர்.

அதன்படி, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க அந்த அமைப்பு உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்