இராவணா -1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது

இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட இராவணா -1 என்ற செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

அமெரிக்க சர்வதேச செய்மதி நிலையத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) மதியம் (3.45) விண்ணில் ஏவப்பட்ட இந்த செய்மதி 400 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஜயரத்ன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற துலானி சாமிகா என்ற மாணவியும் இணைந்து இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.

1000 சென்றி மீற்றர் வரை சிறியதாக காணப்படும் இந்த செயற்கைக்கோள் 1.1 கிலோகிராம் நிறையை கொண்டுள்ளது.

ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனத்தில் வைத்து இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்