கைது செய்யப்பட்ட எழுத்தாளரை விடுவிக்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

எழுத்தாளர் ஷக்திக சத்குமார கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக தற்போது நடைபெறுகிறது.

பௌத்த பிக்குமாரை தனது எழுத்துக்களால் விமரிசித்தாரென சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய ஐ.நா. ஆதரவு சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் கைதுசெய்யப்பட்டு இரண்டு மாதகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ICCPR பற்றிய விளக்கம் – “எந்தவொரு நபரும் யுத்தத்துக்கு அல்லது பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறைக்கு தூண்டுகோலாக அமைந்த தேசிய, இன அல்லது மத வெறுப்புக்கும் பரிந்துரைக்க கூடாது. குற்றவியல் சட்டத்தின் 291b இன் கீழ், “எந்தவொரு இனத்தினதும் மத உணர்வுகளை வேண்டுமென்றே வன்மத்துடன் அவமதிப்பது” ஒரு குற்றமாகும்.)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்