சொப்பீன்பாக்குடன் வெளியேறியவர்கள் பிரபாகரனால் இன்று கோடீஸ்வரர்கள் !

தமிழீழ விடுதலைப்  புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனத்தினால் கடந்த காலத்தில் வடக்கில் இருந்து சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடிஸ்வரர்களாகிவிட்டனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும்,தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் ஒப்பிடமுடியாது என்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கருத்தை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரின் கருத்தானது தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சரியானதே என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப்புலிகள் இலட்சியத்துடன் இலக்குகளை தேர்ந்தெடுத்து போராட்டத்தை ஆயுத ரீதியாக கொண்டு சென்றவர்கள் எனவும் அவர்கள் எடுத்த முடிவு தீர்க்கதரிசனமாக அமைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்