முஸ்லிம் எம்.பிக்களின் இராஜினாமா குற்றவாளிக்ளுக்கு ஆதரவளிப்பதாகும்!

ஒரு சிலர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினால், ஒட்டுமொத்த முஸ்லிம் பிரதிநிதிகளும் இராஜினாமா செய்துள்ளமையானது, குற்றவாளிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்தச் செயற்பாடானது பிழையான முன்னுதாரணத்தையே காண்பித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம்சாட்டினார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் தற்போது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாட்டில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை அடுத்து அவர்கள் அனைவரும் ஒருமித்து பதவி விலகியமை அவறுகளுக்கான ஒற்றுமையை எடுத்துக்காட்டினாலும் அது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்துக்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்