மைத்திரி தலைமையில் பொசன் பெரஹர

பொலனறுவை வரலாற்று முக்கியத்துவமிக்க பொசன் பெரஹர நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க வட்டதாகையவுக்கு அருகில் ஆரம்பமானது.

சங்கைக்குரிய வென்டறுவே உபாலி நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் அனுசரணையுடன் மாவட்டத்தின் அரச நிறுவனங்கள், விவசாய சமூகத்தினர், தன்னார்வ நிறுவனங்கள், வர்த்தக சமூகத்தினரது முழுமையான பங்களிப்பில் இந்த வருடாந்த பெரஹர ஏற்பாடு செய்யப்படுகின்றது.

பிரதேசத்தின் மகாசங்கத்தினர், பொலனறுவை நகர பிதா சானக்க சுதத் ரணசிங்க, மாவட்ட செயலாளர் பண்டுக்க அபேவர்த்தன ஆகியோர் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்