சப்தகன்னியர் ஆலயத்தின் வளாகம் தொடர்ந்தும் இராணுவத்தினர் வசமுள்ளதாக மக்கள் விசனம்!

வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தின் சடங்கு வழிபாடுகளுடன் தொடர்புடைய இடம் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பல தரப்பினரிடமும் முறையிட்டுள்ள போதிலும் இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற சப்த கன்னியர் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த ஆலயமென கூறப்படுகிறது.

இந்த ஆலயத்தினுடைய பாரம்பரிய முறைப்படியான கிரிகைகளை செய்கின்ற ஆலய வளாகமானது யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தால் அபகரித்து குறித்த காணியில் பாரிய விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு பௌத்த மதத்தவர்கூட இல்லாத இந்த ஆலய வளாகத்தை இராணுவம் அபகரித்து பௌத்த விகாரை அமைத்துள்ளமையானது பல்வேறு நெருக்கடிகளையும் மக்கள் மத்தியில் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் இந்த விடயம் தொடர்பாக பல தரப்பினரிடமும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில், ஆலய கிரிகைகளை செய்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பாக ஆலய தரப்பு மற்றும் கிராம மட்ட அமைப்புக்களால் பல்வேறு தரப்பினருக்கும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

எனவே இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்புக்கள் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்