600 கடிதங்களுடன் கைதான கிரியெல்லவின் அலுவலக அதிகாரிகள் பிணையில் விடுதலை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான 600 கடிதங்களுடன் கைதான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அலுவலக அதிகாரிகள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரையும் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பெயரை குறிப்பிட்டு இன முறுகலை ஏற்படுத்தக் கூடிய சொற்கள் அடங்கிய 600 கடிதங்களுடன் மூவர் கொழும்பு மத்திய அஞ்சல் நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அலுவலக பணியாளர்கள் என தெரிவிக்கப்பட்டதோடு, அதனை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும் ஒப்புக்கொண்டார்.

எனினும் இச்சம்பவம் தொடர்பாக தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்