NTJவின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் ஃபவாஸ்ஸிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவரை எதிர்வரும் 2ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வாழைத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் ஸ்டிக்கர்கள், ஒளிப்படங்கள் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான காணொளிகள் தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவரை 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்ததுடன், பின்னர் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்