தமிழர்களின் நலன்களைப் பலியிடும் தரப்புக்களுடன் சேர்வது அர்த்தமற்றது – கஜேந்திரன்

தமிழ் மக்களின் நலன்களைப் பலியிடும் தரப்புக்களுடன் கூட்டுச் சேர்வது அர்த்தமற்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனையே தமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “தான்  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து பணியாற்றினால், சாதிக்க முடியாதது ஒன்றுமில்லையென வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். அதேபோல சி.வியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஈடுபாடுள்ளதாக தமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தெரிவித்திருந்தார். அதற்கு நாம் தயாராகவே உள்ளோம்.

ஆனால், தமிழ் மக்களின் நலன்களைப் பலியிடும் தரப்புக்களுடன் கூட்டுச் சேர்வது அர்த்தமற்றது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்