தமிழரசின் தீவக வாலிபர் முன்னணியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின்  தீவக கிளை தலைவர்  கருணாகரன் குணாளன் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தீவக செயற்பாட்டாளருமாகிய கருணாகரன் குணாளன் அவர்களின்  நிதியுதவியில்  பருத்தியடைப்பு விளையாட்டு கழகத்தினருக்கும் ,  நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழகத்தினருக்கும்   பதினெட்டாயிரம் ரூபாய்   பெறுமதிமிக்க   விளையாட்டு உபகரணங்கள்  வழங்கிவைக்கப்பட்டன.

இவ் நிகழ்வில்   புதிய சுதந்திரன் பத்திரிகை ,  Tamil Cnn இணையத்தளத்தின்   நிர்வாக பணிப்பாளர்    கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி  ,  தமிழ் அரசுக்கட்சியின் வாலிப முன்னணி  தீவக கிளை தலைவர்  கருணாகரன் குணாளன்,  பொருளாளர்  ரமேஷ் றமில்டன் , உறுப்பினர் குஷன் மோகனரூபன் ,   தமிழ் அரசுக் கட்சியின்  ஊர்காவற்துறை மூலக்கிளையின்  தலைவர்   கனகையா , செயலாளர்  மடுத்தீன் பெனடிக்ற் ,  பொருளாளர்  வரதராசன்  , புங்குடுதீவு – நயினாதீவு  மூலக்கிளையின்  உப செயலாளர்  லாவண்யா மகேஸ்வரன் மற்றும்  சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள் , விளையாட்டுக்கழகங்களின்  பிரதிநிதிகள்  ஆகியோரும்   கலந்துகொண்டனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்