காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவுக்குழுவில் சாட்சியம்!

சர்ச்சைகளுக்கு மத்தியில் கூடியுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி முன்னிலையாகியுள்ளார்.

தாக்குதல்கள் குறித்து ஆராயும் குறித்த குழுவில் அவர் தற்போது சாட்சியம் வழங்கி வருகிறார்.

வவுணதீவு பொலிஸார் படுகொலை மற்றும் பயங்கரவாதிகள் குறித்து காத்தான்குடி மக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் தொடர்பாகவும் அவர் இதன்போது சாட்சியமளிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்