தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிபுரியாத அரசு மஹிந்தவுக்கு வாகனத்தை கொள்வனவு செய்கின்றது – ஜே.வி.பி.

குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்காத இந்த அரசாங்கம் அதிசொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த அரசாங்கம் நஷ்ட ஈட்டினை முழுமையாக வழங்கவில்லை.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய பல இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல எதிர்க்கட்சி தலைவருக்கு வாகனம் வழங்குவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்