கடந்த வருட கறுவா ஏற்றுமதியில் 35,000 மில்லியன் வருமானம்

கடந்த வருடத்தில் கறுவா ஏற்றுமதியின் மூலம் இலங்கை 35,000 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

இந்த வருடத்தில் வரலாற்றில் அதிக தொகை கறுவா ஏற்றுமதி செய்யப்படுவதாக கறுவா வர்த்தகம், ஏற்றுமதி விவசாய பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஏ.பி. ஹீன்கந்த தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 13 வீத அதிகரிப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சுமார் 80000 ஏக்கரில் கறுவா பயிர்செய்யப்படுவதுடன் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஒரு கிலோகிராம் கறுவாயின் விலை 2,000 ரூபாவாகும்.இதேவேளை, இலங்கை கறுவாவை அதிகம் கொள்வனவு செய்யும் நாடு மெக்ஸிக்கோ என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்