வாகனத்தையும் வீட்டையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார் – சபையில் மஹிந்த

எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை எதிர்க்கட்சி தலைவராக இருந்த இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்

இதன் காரணமாகவேதான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களுக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்க்கட்சி தலைவருக்கான வீடு, வாகனம் என்பவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீண்டும் கையளிக்கவில்லை. இந்நிலையிலேயே தான் குறித்த கோரிக்கையை விடுத்ததாக தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்