வாசிப்பு போட்டியில் தேசியத்தில் வென்ற நுணாவில் மாணவர் இருவர் சீனா பயணம்!

பாடசாலை மாணவர்களுக்கிடையில் ”வாசிப்பை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டமும் ஆலோசனைக் கோவையும் 2018” போட்டியில் கைதடிநுணாவில் அ.த.க.பாடசாலை மாணவர்கள் இருவர் தேசிய நிலையில் தெரிவாகியுள்ளனர். அவர்கள் சீனாவுக்கு 10 நாள்கள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

மத்திய கல்வி அமைச்சின் பாட சாலை நூலக அபிவிருத்திச் சபையால் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாண வர்களிடையே “நூல்களாகிய தோழர்களே நேசமிகு நண்பர்கள்” என்னும் தலைப்பில் வாசிப்பு போட்டி நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட கைதடி நுணாவில் அ.த.க.பாடசாலை மாணவர்களான சஜித்தா துரைசிங்கம், சிறிதரன் சாரங்கன் ஆகியோர் தேசிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்டு 10 நாள்கள் சுற் றுப்பயணமாக சீனா நாட்டுக்கு செல்லவுள்ளனர்.  என்று பாடசாலை அதிபர் ஆ.தங்கவேல் அறிவித்துள்ளார்.

இந்த மாணவர்களுக்கு உரிய முறையில் பயிற்சிகளை வழங்கிய ஆசிரியை திருமதி கலைமகள் சியாம்சுந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்