வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு முன்பாக வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

வவுனியா நாகர் இலுப்பைக்குளத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதோடு, தமக்கு வீட்டுத்திட்டம் வழங்க வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறி ஆதாரப்படுத்தும் வரைபடத்தினையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

நாகர் இலுப்பைக்குளம் கிராமத்தில் வாழும் சுமார் 34 குடும்பங்களுக்கு நீண்ட காலமாக வீடுகள் வழங்கப்படாமல் உள்ளதென்றும் இது தொடர்பில் நாம் பல தடவைகள் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு தெரிவித்துளளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் திருமதி வி.எம்.வி.குரூஸ் கருத்து தெரிவித்தபோது, “வவுனியா மவாட்டத்தில் 142 மாதிரி வீடமைப்பு கிராமங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வீட்டுத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் கடந்த 10ஆம் திகதி நாகர் இலுப்பைக்குளத்திலும் 2 மாதிரி கிராமங்களுக்கு அடிக்கல் நாட்டியிருந்தோம். இதற்கான பயனாளிகள் விபரம் பிரதேச செயலகத்தினாலேயே தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் நாங்கள் அதனை பார்வையிட்டு எங்களால் முடிந்தளவுக்கு வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி செல்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்