சிறைக்குள் ‘செல்பி;’ சிக்கினார் துமிந்த!

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலை வழக்கின் மரணதண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் ‘செல்பி’ புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சிறை அறைக்குள் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ‘பேஸ்புக்’கில் பதிவொன்றை இட்டுள்ள பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,

“அனைத்துத் துறைகளின் கவனத்துக்கும். நீதி அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் ஹிரு தொலைக்காட்சி  அறிந்துகொள்ளவும். சிறையிலிருந்து IMO Call மூலம் தனது வர்த்தகத்தைச் செய்யும் பிரபல கைதியை அடையாளம் தெரியுமா? – புகைப்பட உதவி சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு” என்று குறிப்பிட்டுள்ளார். (22)

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்