வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியா கந்தபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நாகர் இலுப்பைக்குளம் கிராம மக்கள் தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க கோரி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் 50 மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்

நாகர் இலுப்பைக்குளத்தில் 43 வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ள போதும் 35 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டங்கள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. வீட்டுத்திட்டம் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ள போதும், எமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும் என்றே நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் திருமதி எம். குரூஸ்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது 147 மாதிரிக் கிராமங்களை வவுனியாவில் அமைத்துள்ளது.

பரவலான வீடமைப்பு திட்டங்களுக்கு எமக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பயனாளிகள் தெரிவானது பிரதேச செயலகத்தினூடாக எங்களுக்கு வழங்கப்படுகிறது இருந்தபோதும் எமது அதிகாரவரம்புக்குட்பட்டு எமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம் என தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்