தமிழர் மீதான இனப்படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்றக்குழு கோரிக்கை

கனடிய எதிர்கட்சியான கன்சவ்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கானட் ஜெனஸ் MP Garnett Genius அவர்களால்கனடிய வெளியுறவு மற்றும் பல்நாட்டு அபிவிருத்திக்கானபாராளுமன்றக் குழுவில் முன்மொழியப்பட்டு அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற பிரதிநிதிகளாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபு பின்வருமாறு:

 தற்போது செயற்பாட்டிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச முன்னேற்றத்திற்கான குழுவால்கனடிய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படும் கோரிக்கை வருமாறு:

 1. சிறீலங்காவில் வன்முறைகள் மற்றும் பேர்ரினால் பாதிப்புற்ற அனைவருக்கும் எமது கவலையைத் தெரிவிக்கிறோம்.

2. அண்மைக் காலத்தில் சிறீலங்காவில் முஸ்லிம்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டிப்பதுடன்அடிப்படை மனித உரிமைகளை மதித்தவாறு இனவாத மற்றும்தீவிரவாத செயற்பாடுகளை தடுக்க அதிகரித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறீலங்கா அரசை வேண்டுகிறோம்.

3. உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில் பாதிப்படைந்தோருக்கு நீதிவழங்க சிறீலங்கா அரசு முனையவேண்டும்அத்துடன் சமயத் தலங்களைப் பாதுகாப்பதற்கும் மதரீதியான சிறுபான்மைஇனங்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. ஐநா மனித உரிமை சபையின் தீர்மானங்களான 30-1 மற்றும் 40-1 என்பவற்றில் தெளிவாகக் குறிப்பிடப்படும் காலக்கெடுவுக்குள் சிறீலங்கா தனது கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டுமென்ற கனடிய நிலைப்பாட்டை மீளவும் உறுதிசெய்வதுடன்அந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்குமான அமைதிஇணக்கப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றைமுன்னெடுப்பதில் கனடாவின் ஆதரவு தொடருமெனவும் உறுதிகூறுகிறோம்.

5.  2009 போரின் இறுதிப்பகுதி உட்படதமிழர்களுக்கெதிராக சிறீலங்காவில் நடைபெற்றிருக்கக்கூடிய இனஅழிப்புக்கு சுதந்திரமான சர்வதேச விசாரணை நடாத்துவதற்கு ஐநா சபையைக்கோருகிறோம்.

6. சட்டக்கோவை 109ற்கு அமைய, கனடிய அரச சபையில் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதுடன்இந்த அறிக்கைக்கு அரசாங்கம் விரிவான பதிலை வழங்க வேண்டுமென்றும்கோருகிறோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்