இ.தொ.கா ஒரு போதும் மலையக கல்வியில் அலுத்தங்களை பிரோகிக்காது அது சுதந்திரமாக இயங்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு.

வலையக கல்வி கல்வியை பொருத்த வரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு போதும் அவர்களின் நிர்வாக செயப்பாட்டில் தலையிடுவதில்லை. அது ஐயா சௌமிய மூர்த்தி தொண்டமானும் சரி நானும் சரி அந்த நிர்வாகத்தில் நாங்கள் தலையிடுவதில்லை. அதற்கு மாறாக எங்களிடம் பாடசாலை ரீதியாகவோ நிர்வாக ரீதியாகவோ மேம் படுத்துவதற்கு தேவையான வளங்களையோ அல்லது இதர தேவைகளையோ கேட்பார்களேயானால் அதனை நாங்கள் பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம். நான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் அனவருக்கும் கூறியிருக்கி;ன்றேன் கல்வியில் தலையிட வேண்டாம்.என்று  அது சுதந்திர மாக இயங்க வேண்டும் கல்வி தான் இந்த சமூகத்தின் அத்திவாரம் அத்திவாரத்தில் குறையேற்பட்டால் அது முழு சமூகத்தையே பாதிக்கும்.ஆகவே தான் அன்று முதல் இன்று வரை நாங்கள் அந்த கல்வி நிர்வாக விடயத்தில் தலையிடுவதில்லை.அவ்வாறு யாராவது தலையிட்டாலும் அதனையும் என்னிடம் சொல்லுங்கள். அதனை நான் பார்த்துக்கொள்கிறேன்  என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் அவர்களின் ஏற்பாட்டில் மலையகத்தில் தோட்டபுற பாடசாலைகளில் உள்ள பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான அறிவினை விருத்தி செய்து க.பொ.த காதாரண தரத்தில் அதிகமான மாணவர்களை சித்தி பெற செய்வதற்காக பரீட்சை வழி காட்டி மாதிரி வினா நூல்கள் மிகவும் கஸட்டப் பாடசாலைகளுக்கு வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று (18) ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த வாரம் என்னிடம் ஆசிரியர் இடமாற்றத்திற்காக ஒருவர் வந்திருந்தார். அவரை இடமாற்றம் செய்யுமாறு இ.தொ.கா ஆதரவாளர்கள் அழைத்து வந்திருந்தனர் அவர்களுக்கு நான் கூறியது ஒன்று தான் பாடசாலைக்கு ஆசிரியர் தேவை என்றால் அதனை நான் பெற்றுத்தருகிறேன். இவர் வேண்டும் என்று கூறுவது பொருத்தமற்றது ஆகவே அவரை அதே பாடசாலையில் போய் வேலை செய்ய சொல்லுங்கள் என அனுப்பி விட்டேன்.

அண்மையில் உங்களுக்கு தெரியும் புவக்பிட்டிய பகுதியில் இரு அரசியல் தலைவர் செய்த இடம்மாற்றத்தினால் இன்று அந்த பாடசாலையின் கல்வி சீர்குலைந்துள்ளது. அவ்வாறு பாடசாலை கல்வி சீர் குலைய இடமளிக்க முடியாது. அது தொடர்பாக நாங்கள் பேசியிருக்கின்றோம். அத்தோடு அந்த பாடசாலைக்கு ஆசிரியர்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்தள்ளளோம்.ஆகவே இந்த பாடசாலைகளும் மாறிவிட இடமனிக்க முடியாது.எமது கல்வி வளர வேண்டும் அதற்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கத்தான் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்.

அத்தோடு மீறி யாராவது உள் நுழைந்தால் எம்மிடம் சொல்லுங்கள் அதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம். கல்வி வளர்வதற்கு என்னென்ன தேவையோ அதனை நாம் செய்து கொடுப்போம் இன்று கணகராஜ் அவர்கள் ஒரு பாடத்தனை எடுத்து மாணவர்களின் நலனுக்காக வேலை செய்து வருகிறார.; இது போன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடத்தினையும் எடுத்து அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்தோடு இதனை ஹட்டன் கல்வி வலயத்தில் மாத்திரம் நடைமுறை படுத்தாது எமது மக்கள் வாழும் சப்பிரகமுவ ஊவா போன்ற மாகாணங்களிலும் முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்